மூக்கறுப்புப் போர்

தமிழக வரலாற்றினை எடுத்துக்கொண்டால் போர்களுக்குப் பஞ்சமிருக்காது.அவற்றுள் பெரும்பான்மையான போர்கள் அவை நிகழ்ந்த களத்தினைக் கொண்டே வழங்கப்பட்டு வந்துள்ளன.உதாரணம் புகழ்பெற்ற வெண்ணிப்பறந்தலைப் போர் கரிகால் சோழனது காலத்தில் வெண்ணிப்பறந்தலை என்னுமிடத்தில் நடைபெற்றது.

ஒரு சில போர்கள் மட்டுமே நிகழ்வுகள் கொண்டு நினைவு கொள்ளப்படுகின்றன.அவற்றுள் ஒன்று தான் மூக்கறுப்புப் போர்.

விஜயநகர சாம்ராஜ்ய வீழ்ச்சிக்குப் பின் தன்னுரிமை பெற்றது நாயக்கர் மரபு.17 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரை திருமலை நாயக்கர்* காலத்தில் மைசூருக்கும் மதுரைக்குமிடையே பகை மூண்டிருந்தது.

*திருமலை நாயக்கர்-மதுரை நாயக்கர் மரபின் சிறந்த அரசராக அறியப்படுகிறார்.

மைசூர் அரசன் கந்தீரவனின் படைகள் அவ்வபோது மதுரையின் வடமேற்கு பாளையங்களைத் தாக்கி பொதுமக்களின் மூக்கினை அறுத்து வந்தன.இதனால் வெகுண்ட நாயக்கர் இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் உதவியோடு படை திரட்டலானார்

திண்டுக்கல்லில் நடைபெற்ற போரில் நாயக்கர் படை வென்று மைசூர் வீரர்களின் மூக்கினை அறுத்து பழி தீர்த்துக்கொண்டனர்.

அந்நிகழ்வே இன்றும் அப்போரினை நினைவுறுத்தும் பெயராக உள்ளது

#மூக்கறுப்புப்போர்

படம்:இணையம் இலக்குவன் சூர்ப்பநகை மூக்கறுப்பு