கொப்பத்து பரணி
Probably first bharani in tamil literature

“அமரிடை ஆனைகள் ஆயிரம் வென்ற வெற்றி வீரனுக்குப் பாடுவது பரணி “

என பாட்டியல் இலக்கண நூல் விளக்கம் தருகிறது.

வலிமைமிகு பகைவனை அவனிடத்திலே வெல்லும் வீரனே பரணி பாட உகந்தவனாகிறான்.

image

முடியுடை மூவேந்தரும் சங்ககாலத்திலிருந்தே போர்க்களத்தில் பெரு வெற்றிகள் பல பெற்றிருந்தாலும் பரணி பாடும் வழக்கம் பிற்காலத்திலிருந்து தான் தொடங்கியது போலும்.

கலிங்கத்திற்கு(தற்போதைய ஒடிசா) எதிராக பெருவெற்றி கொண்ட முதலாம் குலோத்துங்க சோழனை (1070-1120) தலைவனாக்கி பரணி பாடினார் ஜெயங்கொண்டார்.

இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் தொன்மையான பரணி நூலாக இதுவே அறியப்படுகிறது.ஆனால் தொன்மை என்றும் முதன்மை ஆகாதே!

இதற்கு முன்னும் பல பரணி நூல்கள் இருந்து மறைந்து போனதை ஆங்காங்கு காணப்படும் சிறு துணுக்குகள் சுட்டிக் காட்டுகின்றன.

1)குலோத்துங்கனுக்கு முன்பே படை நடத்தி கலிங்க பெரும் பரணி கொண்ட விக்கிரம சோழன்

படிக்கஒட்டக்கூத்தர் இயற்றிய கலிங்கத்துப்பரணி

2)பரணி கொண்ட கங்கை கொண்ட சோழனின் (முதலாம் இராசேந்திரனின்)இரு புதல்வர்கள்

கொப்பத்துப் பரணி& கூடற் சங்கமத்து பரணி

கங்கை கொண்ட சோழனுக்கு பின் அரசாண்ட முதல் இராசாதிராச சோழன்(1018-1054) கொப்பத்து போர்க்களத்தே மடிந்து யானை மேல் துஞ்சிய தேவரான பின் போர்க்களத்திலே முடி சூடிக்கொண்ட அவனது இளவல் இரண்டாம் இராசேந்திரன்(1054-1063) ஆஹவமல்ல சாளுக்கியனை(முதலாம் சோமேஸ்வர வர்மன்)   புறமுதுகிடச் செய்தான்.அவனுக்குப் பின் அரசாண்ட வீர ராசேந்திர சோழனும் கூடல் சங்கமம் என்னுமிடத்தில் பெரும்படையோடு வந்த ஆஹவமல்லனை ஐம்முறை வென்றான்.

இவ்விரு வெற்றிகளையும் சிறப்பிக்க முறையே கொப்பத்துப் பரணி,கூடல் சங்கமத்து பரணி பாடப்பட்டிருக்கின்றன.ஆனால் காலத்தின் வேகத்தில் மறைந்துவிட்டன.

கொப்பத்து வெற்றியை குறிப்பிடும் இரண்டாம் இராசேந்திரன் மெய்க்கீர்த்தி

……
பேராற்றங் கொப்பத்து வந்தெதிர் பெருத

ஆகவமல்லன்தன் அடல்சேனை எல்லாம் பாராது

நிகழப் பசும்பிணம் ஆக்கி

ஆகவமல்லன் புரக்கிட்டோட அவன்

ஆனையும் குதிரையும் ஒட்டக நிரைகளும்

பெண்டிர் பண்டாரமும் அகப்பட பிடித்து……..

கொப்பத்து போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்றதை குறிப்பிடும் விக்கிரம சோழனுலா

” வெப்பத் தடுகளத்து வேழங்களாயிரமும்
கொப்பத் தொரு களிற்றாற் கொண்டோனும்”

சினங்கொண்டு தனது  ஒரு யானையால் ஆயிரம் யானைகளை வென்றான்(பரணிக்கான இலக்கணம்) .

இரண்டு பரணிகளைப் பற்றி கூறும் இராசராச சோழனுலா

“கொலையானை பப்பத் தொரு பசிப்பேய் பற்ற வொரு பரணி
கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன் ஒப்பொருவர்

பாடவரிய பரணி பசுடொன்றின் கூடல்சங்கமத்துக் கொண்ட கோன்”

கொப்பத்து களத்தில் பேய்களின் பசியாற்ற ஒற்றை யானையைக் கொண்டு பரணி கொண்ட வேந்தன்.

அதைப்போன்றே பாடுவதற்கு அரிய பரணியை கூடல் சங்கமத்தில் கொண்ட வேந்தன்.

இம்மூன்று பரணிகளும் மறைந்து போனதால் குலோத்துங்கனின் பரணி முதன்மையானதாக உள்ளது.

#பொன்